ஆற்றை கடந்து ராணுவ பயிற்சி..பாய்ந்தோடி வந்த வெள்ளத்தில் சிக்கிய T 72 பீரங்கி.. வீரமரணமடைந்த வீரர்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்திருக்கிறது. எனவே இந்த பகுதி பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது.

ராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக சமீபத்தில் இந்த பதற்றம் தணிந்திருக்கிறது. ராணுவ வீரர்கள் இந்த பகுதியில் தொடர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இப்படி நேற்று பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் பீரங்கி ஒன்று ஆற்றை கடக்க முயன்றிருக்கிறது. இந்த பீரங்கியில் 5 ராணுவ வீரர்கள் இருந்திருக்கின்றனர். ஆற்றை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பீரங்கி முழுவதுமாக மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. வீரர்கள் T-72 ரக பீரங்கியில் பயிற்சி செய்திருக்கின்றனர். சோவியத் யூனியன் காலத்தில் இந்த பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ரஷ்யாவிடம் இந்தியா ஏற்கெனவே ஆயுத டீலிங் கொண்டிருந்ததால் இந்த பீரங்கிகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டிருந்தன.
இந்த பீரங்கிகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.4.16 கோடி மதிப்புடையதாகும். இதில் மூன்று பேர் தாராளமாக பயணிக்கலாம். ஆனால், அவசியம் எனில் 5 பேர் வரைக்கூட பயணிக்க முடியும். ஏறத்தாழ 41 ஆயிரம் கி.கி எடை கொண்ட இந்த வகை பீரங்கிகள், 60-75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாகும். ஆற்றில் செல்லும் திறன் கொண்டவையாக இவை அறியப்பட்டாலும், தண்ணீரில் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பீரங்கிகளாக இது இருக்கிறது.
இதனை தயாரித்த ரஷ்யாவே இந்த பிரச்னையை ஒப்புக்கொண்டது. இது நீருக்குள் செல்லும்போது சில நேரங்களில் ஸ்டக்காகி நின்றுவிடுகிறது என ரஷ்ய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீரில் தற்போது நடந்த விபத்து குறித்து ராணுவம் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications