Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டரியல்" பாஜக.. அடித்து தூக்கிய மம்தா.. 4 இடங்களிலும் திரிணாமுல் காங். அபார வெற்றி.. "அவர்" வருவாரா?

4 மாநகராட்சி தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4 மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது.. அசன்சால், பிதான்நகர், சிலிகுரி, சந்தநகூர் ஆகிய மாநகராட்சிகளில் திரிணாமுல் கட்சியே முன்னிலை பெற்றதால், வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி மனமார நன்றி தெரிவித்துள்ளார்... இந்த வெற்றியையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் குஷியில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிதான் நகர், அசன்சோல், சிலிகுரி, சந்தன் நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. எந்த வன்முறையும் இன்றி அமைதியாக இந்த தேர்தல் நடந்ததாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

வழக்கமாக மேற்கு வங்கத்தில் தேர்தல் என்றாலே கலவரம், வன்முறைகள் வெடிப்பது வழக்கம்.. ஆனால் இன்று நடந்த தேர்தலில் அப்படிப்பட்ட வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.. இதற்கு காரணம் தேர்தல் ஆணையம் முழு பாதுகாப்புடன் தேர்தலை நடத்தியதுதான்.. இதை மம்தாவே தெரிவித்திருந்தார்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

இன்றைய தினம் அந்த 4 மாநகராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.. இதில், பிதான்நகரை பொறுத்தவரை மொத்தமுள்ள 41 இடங்களில் 39 இடங்களையும் திரிணாமுல் கட்சி கைப்பற்றிவிட்டது.. காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.. ஆனால் பாஜக ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

பாஜக

பாஜக

சந்தநாகூர் தொகுதியில் மொத்தமுள்ள 32 இடங்களில் 31-ஐயும் திரிணாமுல் காங்கிரஸே கைப்பற்றிவிட்டது.. மிச்சம் ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றி உள்ளது.. சிலிகுரி தொகுதியில் இந்த தேர்தலில் 79.72 சதவீத ஓட்டுக்களை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுவிட்டது.. பாஜக 10.4 சதவீதமும், சிபிஎம் கட்சி 8.5சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளனர். இந்த 4 மாநகராட்சி தேர்தலின் இந்த வெற்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது..

 மம்தா நன்றி

மம்தா நன்றி

இதுகுறித்து மம்தா பானர்ஜி வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.. தன்னுடைய ட்வீட்டில், "மா, மாதி, மானுஷ்" அதாவது அம்மா, தாய்மண், மக்கள் பெற்ற மீண்டும் இன்னொரு மகத்தான வெற்றியாகும் இது.. ஆசன்சோல், பிதான்னகர், சிலிகுரி, சந்தன்நகர் மக்கள் இந்த தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது நல்ல அபிப்பிராத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்... அவர்களுக்கு என்னுடைய நன்றி.. இம்மாநிலத்தின் வளர்ச்சி பணிகளை அதிக ஆர்வத்துடன் முன்னெடுத்து நாங்கள் செல்ல போகிறோம்" என்று பூரித்து போய் சொல்லி உள்ளார்.

கோஷம்

கோஷம்

இந்த மா, மாதி, மானுஷ் என்பது, கடந்த 2009-ல் நடந்த எம்பி தேர்தலின்போது மம்தா உருவாக்கிய ஸ்லோகம் ஆகும்.. அப்போது முதல் எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, மம்தா இந்த கோஷத்தைதான் சொல்வார்.. அவரது தொண்டர்களும் இதே முழக்கத்தைதான் சொல்வார்கள்.. இந்த மாஸ் வெற்றிக்கும் இதே ஸ்லோகத்தை மம்தா பயன்படுத்தி உள்ளார். பாஜக நிலைமை இங்கு பரிதாப நிலையை எட்டி உள்ளது கவனிக்கத்தக்கது.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடந்தது..

 படுதோல்வி

படுதோல்வி

எப்படியும் பெரும்பான்மையான தொகுதிகளையாவது கைப்பற்றி விடுவோம் என்று சவால் விட்டு களமிறங்கியது பாஜக.. ஆனால், வெறும் 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.. இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக சறுக்கிவிட்டது.. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மொத்தமுள்ள 144 இடங்களில் 134 இடங்களை கைப்பற்றியது.. ஆனால், பாஜகவே ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்று, 2வது இடத்தை பிடித்தது.. அதாவது 3 இடங்கள் பாஜக, காங்கிரஸ், மற்றும் இடதுசாரி தலா 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்


சிலிகுரி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலிலும் திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.. கடந்த 2015ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இதே சிலிகுரியில் இடதுசாரி கட்சிகள் 23 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.. ஆக மொத்தம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலிலும் வெற்றி வாகை சூடியுள்ளது... இதை அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் சாலைகளில் டான்ஸ் ஆடி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திரிணாமுல் வெற்றியை தக்க வைத்துள்ளது.. இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது, ஐபேக் டீமின் பிரசாந்த் கிஷோர் மூலமாகவே நடந்தது.. ஆனால், இப்போது பிரசாந்த் கிஷோருடன் மம்தாவுக்கு கடந்த சில நாட்களாகவே உரசல் ஏற்பட்டுள்ளது.. அநேகமாக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக பிகே இனி இருக்க போவதில்லை என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 அவர் வருவாரா?

அவர் வருவாரா?

எனினும், இந்த 4 மாநகராட்சி வெற்றியில் பிரசாந்த் கிஷோருக்கும் பங்கில்லை என்று சொல்லி விட முடியாது... எனவே, இந்த தேர்தலின் வெற்றியானது, பிரசாந்த கிஷோர் மீதான அதிருப்தியை விலக்கும் அல்லது குறைக்கும் என்று தெரிகிறது.. சுருக்கமாக சொல்ல போனால், பிகே மீதான மோதல் போக்கை மம்தா விரைவில் முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என்றே நம்பப்படுகிறது.. ஆனால், ஒருவேளை மம்தா அப்படி சுமூக போக்கை விரும்பினால், பிரசாந்த் கிஷோர் ஏற்பாரா? அல்லது பிரிந்து நிற்பதே சரியென்றே முடிவெடுப்பாரா தெரியவில்லை... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+