டெல்லியில் 4 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை அடையாளம் காட்ட திணறும் பரிதாபம்
டெல்லி: டெல்லியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அடிவயிறு வலிப்பதாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. காரணம் தன்னை பலாத்காரம் செய்தது யார் என்று சிறுமியால் உறுதியாக கூற முடியவில்லை.
ஒரு முறை பொதுப்பணித்துறை ஊழியரின் 16 வயது மகனை கைகாட்டும் சிறுமி அடுத்த முறை தனது உறவுக்கார சிறுவனை கை காட்டுகிறார்.












Click it and Unblock the Notifications