டெல்லியில் 7 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை
டெல்லி: டெல்லியில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான அவர் கூலித் தொழில் செய்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இரவு அவரது 7 வயது மகள் தனக்கு வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாய் சிறுமியை பரிசோதனை செய்தபோது அவரது பிறப்புறுப்பில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் தனது மகளிடம் நடந்ததை கூறுமாறு கேட்டார். அப்போது தான் சிறுமி தன்னை தனது தந்தையே பலமுறை பலாத்காரம் செய்த விபரத்தை தெரிவித்தார். உடனே அந்த பெண் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரமை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications