For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் திறப்பு திடீர் நிறுத்தம்.. விவசாயிகளால் கே.ஆர்.எஸ் அணை முற்றுகை.. 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை சுற்று வட்டாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் குடிக்கவே போதிய நீர் இல்லைதா சூழ்நிலை உள்ளது. எனவே இரு தினங்களாக அம்மாநில விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

 4000 police deployed in Mandya as Cauvery farmers call for agitation

இதனால் கர்நாடக அரசு மீது கோபமடைந்துள்ள விவசாயிகள், கே.ஆர்.அணை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளனர். கர்நாடக விவசாயிகள் போராட்ட அறிவிப்பு காரணமாக, அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் 4,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 6 துணை இராணுவ படை பிரிவினர் மற்றும் 35 அதிரடி படை பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தக்கோரி அணை பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்து தண்ணீருக்குள் பாய்ந்துவிடக்கூடாது, அணை பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
4000 total police deployed including 6 battalion para military force and 35 battalion strike force in Mandya as farmers call for agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X