32 வயது பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக பலாத்காரம் செய்த 5 பேர்
குர்காவ்ன்: 32 வயது பெண்ணை கடத்தி, ஒரு அறையில் அடைத்து வைத்து மூன்று நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் குர்காவ்னில் உள்ள டிஎல்எப் ஃபேஸ் 5ல் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் இருந்த அவரை தலிப் என்கிற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் ரிக்ஷாவில் கடத்தி, அடித்து, நிர்வாணமாக்கி டெல்லியின் வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ஒரு அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்து அந்த 5 பேரும் அவரை 3 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த 3 நாட்களும் அந்த பெண்ணுக்கு உணவு எதுவும் அளிக்கவில்லை. மேலும் அந்த 5 பேர் தாக்கியதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
இந்நிலையில் வாசிராபாத் பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மீட்டனர்.
மேலும் அந்த பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த பெண் அல்தாப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்தாப் தகராறு செய்துள்ளார், பணத்தை தர மறுத்துள்ளார். இதையடுத்து அல்தாப் தலிபிடம் அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அல்தாப் கூறியதையடுத்து தான் தலிப் அந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications