பழங்குடியின காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்த பெண் உள்ளிட்ட 5 பேர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் பழங்குடியின மாணவிகள் தங்கும் அரசு காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புட்டைய்யாகுடெம் என்ற கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்காக அரசு காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு யாரோ பெயர் எழுதாமல் கடிதம் எழுதியுள்ளனர்.
இதைடுத்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது உண்மை என்பது தெரிய வந்தது.
காப்பகத்தில் தங்கியிருக்கும் மாணவிகளை அங்கு சமையல் செய்யும் சியாமளா என்பவர், 4 பேரின் துணையுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சியாமளா மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயதுக்குட்பட்டவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications