சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்.. 22 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் இதுவரை 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளளனர்
கடந்த 10 நாட்களில் சத்தீஸ்கரில பாதுகாப்புப் படையினர் மீதான இரண்டாவது பெரிய தாக்குதல் ஆகும்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக, கோப்ரா, எஸ்.டி.எஃப், டி.ஆர்.ஜி மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய படைகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல் தடுப்பு வேட்டைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
சனிக்கிழமை அன்று சுக்மா மற்றும் பிஜாப்பூர் எல்லையில் உள்ள டேரன் பிராந்தியத்தின் காடுகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க துணை ராணுவ வீரர்கள் முயன்றனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

5 பேர் வீர மரணம்
பதிலுக்கு துணை ராணுவ வீரர்களும் சுட்டனர். இந்த மோதலில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று சண்டையில் ஈடுபட்ட போது காணாமல் போன பாதுகாப்பு படை வீரர்கள் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த சேதம்
இந்த சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் உயரக்கூடும் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதனிடையே இந்த மோதல் பஸ்தார் காடுகளில் மிகப்பெரிய மோதல்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் தமரத்வாஜ் சாஹு கூறியுள்ளார்.

அதிரடி திட்டம்
காவல்துறை அதிகாரி கூறும் போது "ஏராளமான மாவோயிஸ்டுகள் மூத்த தளபதிகளுடன் காட்டில் ஒரு சந்திப்பை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த மாவோயிஸ்டுகளை சுற்றி வளைக்க வீரர்கள் திட்டமிட்டனர். இதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில், சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் உள்ள ஜாகர்குண்டாவில் காட்டுக்குள் பாதுகாப்பு குழுவினர் சென்றனர். துப்பாக்கிச் சண்டை கடுமையாக நடந்தது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications