50+ முறை என்னை சீரழிச்சிட்டாரு.."அந்த போலீஸ்காரர், இப்ப, இங்கே, உடனே, வந்தாகணும்"..அலறவிட்ட இளம்பெண்

50 முறை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது இளம்பெண் பரபர புகார் ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகளும், பாலியல் வக்கிரங்களும் அதிகரித்து வரும் உத்தரபிரதேசத்தில், இன்னொரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இளம்பெண் ஒருவர் போலீஸ்காரர் மீது அதிகாரிகளிடம் புகாரை கொண்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு, இங்கு ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது.

மதன்பூர் என்ற இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது, காரில் 5 பேர் அந்த வழியாக வந்துள்ளனர்.. ரோட்டில் நடந்து சென்ற இந்த பெண்ணை பார்த்ததும், அப்படியே அவரை இழுத்து சென்று காருக்குள் தள்ளிவிட்டு, கடத்திச் சென்றுவிட்டனர்.

 கண்ணாடி ஜன்னல்

கண்ணாடி ஜன்னல்

அந்த பெண் காருக்குள் இருந்து அலறிய சத்தமும் வெளியே கேட்காதபடி, கார் கண்ணாடியை அடைத்துவிட்டனர்.. பிறகு, கொஞ்ச தொலைவில் ஆள்நடமாட்டம் இல்லாத வயலில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அங்கேயே அந்த பெண்ணை வீசிவிட்டு, இவர்கள் மட்டும் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண், மிகவும் சிரமப்பட்டு, புகார் அளிப்பதற்காக ஜலாலாபாத் ஸ்டேஷனுக்கு சென்றார்.. அப்போது டியூட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் இருந்துள்ளார்.. பாதிக்கப்பட்ட பெண் புகார் தரவும், அந்த புகாரை சப் இன்ஸ்பெக்டர் வாங்கி வைத்து கொண்டார்..

 நிலைகுலைந்தார்

நிலைகுலைந்தார்

பிறகு நடந்த சம்பவம் என்னவென்று விசாரித்தார்.. அந்த பெண் ஒன்றுவிடாமல் அழுது கொண்டே சொல்லவும், இறுதியில், அந்த பெண்ணை தன்னுடைய ரூமுக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... நியாயம் கிடைக்கும் என்று ஸ்டேஷனுக்கு வந்த பெண் மேலும் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்துபோனார்.. இதற்கு பிறகு, பரெய்லி மாவட்ட ஏடிஜி அவினாஷ் சந்திராவை நேரில் சந்தித்து, அத்தனையையும் சொல்லி அழுதார்.. இறுதியில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜி தெரிவித்ததுடன், அந்த சப் - இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது..

 காதல் காதல்

காதல் காதல்

இந்த சம்பவம் அப்போது மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இப்போதும் ஒரு சம்பவம் அதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங்... இவர் ஒரு போலீஸ் அதிகாரி.. இவர் மீதுதான் இளம்பெண் ஒருவர் புகார் தந்துள்ளார்.. பிரயாக்ராஜ் பகுதியில் இந்த பெண் வசித்து வந்தபோது , சுனில்குமார் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டதாம்.. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது... இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர்..

 50 முறை

50 முறை

"கல்யாணம் செய்தால், அது உன்னை மட்டுமே" என்று ஆசைவார்த்தைகளை சொல்லி, பாலியல் பலாத்காரம் செய்தாராம்.. அதுவும் 50 முறை பலாத்காரம் செய்தாராம்.. ஒருகட்டத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டதற்கு சுனில்குமார் சிங் மறுத்திருக்கிறார்.. அத்துடன் கொலை செய்து விடுவதாகவும் பெண்ணை மிரட்டியிருக்கிறார்.. இவ்வளவையும் அந்த பெண், புகாரில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகார், பிரயாக்ராஜ் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கான்ஸ்டபிள்

கான்ஸ்டபிள்

இந்த சம்பவம் பற்றி கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.. பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வருகிறாராம் சுனில் குமார்சிங்.. முதன்முதலாக போலீஸ் கான்ஸ்டபிளாக அந்தப் பகுதியில் பணியில் சேர்ந்தபோதுதான் இந்த இளம்பெண்ணை சந்தித்தாராம்.. ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்போது சுனில் சுமார் சிங்குக்கும் திருமணமாகவில்லை.. வாட்ஸ்அப்பில் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர்.. திருமண பேச்சை ஒவ்வொரு முறையும், சுனில்குமாரே எடுத்ததாகவும், அதை வைத்தே தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாகவும் இளம்பெண் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

உடலுறவு

உடலுறவு

உடல் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் ஒருகட்டத்தில் தன்னை மிரட்டவும் ஆரம்பித்ததாக அப்பெண் குற்றம் சாட்டுகிறார்.. இறுதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெண் சொன்னதுமே, அதற்கு உடன்பட மறுத்ததுடன், தான் போலீஸ் இருப்பதால், தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்கிறார், அதனால், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கிருஷ்ணா நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, சுனில்குமார் சிங் குடும்பத்தினரும், தன்னை மிரட்டியதாக அந்த பெண் குற்றஞ்சாட்டுகிறார்.. இப்போது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+