”கலிகாலம்யா” - 24 வயது காதலரை சேர்த்து வைக்க போலீஸில் முறையிட்ட 50 வயது காதலி
அகமதாபாத்: அகமதாபாத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலரான 24 வயது இளைஞருடன் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடனேயே வந்து அளித்த புகாரால் போலீசார் அதிர்ந்து போனார்கள்.
குஜராத்தின் மணிநகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு தனது கணவருடன் வந்த ஆஷா என்ற அந்த 50 வயது பெண் , ரிக்சா டிரைவரான 24 வயதுடைய தனது காதலனான ஜிக்னேஷ் அவரது திருமணத்திற்கு பின் தன்னை மறந்து விட்டதாக தெரிவித்தார். மீண்டும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜிக்னேஷ் மீது ஈர்ப்பு:
இதுபற்றி போலீசார் கூறுகையில், "ஆஷா ஒரு முறை அங்குள்ள கோவிலுக்கு செல்ல ரிக்சாவில் சென்ற போது ஜிக்னேசின் செயல்பாடு அவளை ஈர்த்துள்ளது. அதனால் அவனது செல்போன் எண்ணை கேட்டு வாங்கியுள்ளார் ஆஷா. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
முறிந்த உறவு:
கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆஷாவை சந்தித்த ஜிக்னேஷ் தனது பெற்றோர் தனக்கு பார்த்து வைத்துள்ள பெண்ணை மணக்கப்போவதாகவும் தங்களது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏமாந்த ஆஷா:
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஷா தன்னை ஜிக்னேஷ் ஏமாற்றி விட்டதுடன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் கருதினார். இந்த நேரத்தில் ஆஷாவின் கணவருக்கும் அவரது காதல் விஷயம் தெரிந்துவிட்டது.
கண்டித்த கணவர்:
அவர் ஆஷாவிடம் இம்மாதிரியான செயல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி இந்த காதலை கைவிடுமாறு கூறினார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் தான் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கைவிட்ட போலீஸ்:
முதலில் எப்படியாவது ஆஷாவுக்கு உதவவேண்டும் என நினைத்த போலீசார் ஜிக்னேசுக்கு திருமணமான செய்தி தெரிந்தவுடன் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர். இதனால் அவனது திருமண வாழ்க்கை முறிந்துபோய் விடும் என கருதி தங்களது முடிவை கைவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications