இந்திய மக்கள்தொகையில் 38% பேர்.. மகா கும்பமேளாவில் இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியாச்சு!
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளா நிறைவடைய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தற்போதே 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இப்போது வரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

முக்கிய நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மவுனி அமாவாசை தினத்தில் 8 கோடி பக்தர்களும், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், ஜனவரி 30 அன்று 1.7 கோடி பேரும், பிப்ரவரி 1 அன்று 2 கோடி பேரும் புனித நீராடினர்.
பிப்ரவரி 2 ஆம் தேதியான வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பேரும், மாக் பூர்ணிமா தினமான பிப்.12 அன்று இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்களும் புனித நீராடி உள்ளனர்.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் 38 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை புனித நீராடலில் பங்கேற்றுள்ளனர். வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்கள் எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடையும்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மகா கும்பமேளா நீட்டிக்கப்படும் என்பது உண்மை அல்ல என்றும் சுபநேரங்கள் அடிப்படையில் தான் கும்பமேளா தினங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, எனவே அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே மகாகும்பமேளா திட்டமிட்டபடி பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் முடிவடையும்' என பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர மந்தர் தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவுக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை உ.பி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications