தைலமர காட்டுக்குள்ளே.. சிதறி கிடந்த ஆடைகள்.. போலீஸை மிரள வைத்த அந்த "கோடாரி".. வெட்டு ஒன்று துண்டாம்
மத்திய பிரதேசத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்
போபால்: இன்னொரு பயங்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்களும் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
டெல்லி ஷ்ரத்தா கொலையின் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. ஒரு இளைஞனால் இந்த அளவுக்கு குரூரமாகவும், வன்மமாகவும், கொடூரமாகவும் இருக்க முடியுமா என்ற அதிர்ச்சியை, அப்தாப் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த கொலை குறித்து, கொஞ்சம் உண்மை தெரிந்ததற்கே, நாட்டு மக்கள் உறைந்து போயுள்ளனர்.. இன்னும் முழு உண்மை வெளிவரவில்லை.. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அதற்குள் பங்களாதேஷில் 4 நாட்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது.

ஹவுஸ் ஓனர்
அந்த இளைஞர் பெயர் அபுபக்கர்.. அவரும் ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.. ஆனாலும் கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அறிமுகமாகி 5 வது நாளே, யாருமில்லாத சமயம் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்கே இருவருக்கும் தகராறு நடந்து, கவிதா ராணியை அபுபக்கர் கொன்றுவிட்டார்.. உடனே அந்த ரூமுக்குள்ளேயே, கத்தியை எடுத்து வந்து தலையை வெட்டி உள்ளார்.. விரல்களை தனியாக வெட்டி உள்ளார்.. உடலை தனியாக எடுத்து ஒரு சூட்கேஸில் வைத்துள்ளார்.. பக்கத்திலேயே ஒரு பிளாஸ்டிக் கவரில் தலை கிடந்தது.. இப்போது இவரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

6 துண்டு துண்டாய்
அதற்குள் உத்தரபிரதேசத்தில் இன்னொரு பகீர் நடந்தது.. அந்த இளைஞர் பெயர் பிரின்ஸ் யாதவ்.. அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்... ஆனால், அந்த பெண், வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து முன்னாள் காதலியை, கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று கொன்றுள்ளார்.. மொத்தம் 6 துண்டுகளாக வெட்டி, பாலித்தீன் பைகளில் அடைத்து, தோட்டத்தில் இருந்த கிணற்றிலும் வீசிவிட்டார்.. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

காட்டுக்குள்ளேயே
இதோ இன்னொரு சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. ஷாதோல் பகுதியில் நவம்பர் 13-ம் தேதி தம்பி மற்றும் உறவினர் காணாமல் போனதாக அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவர் புகார் அளித்தார்... அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.. அப்போதுதான், ஷாதோல் பகுதிக்கு அருகில் உள்ள காட்டில் ஒரு பெண்ணின் டிரஸ்கள் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால், போலீசார் சம்பவ இடத்திற்கு, மோப்ப நாயுடன் சென்று ஆய்வு செய்தபோது, அதே காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் தலை, உடல் பகுதி தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டது.

வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், உயிரிழந்தது, ஷாதோல் பகுதியை சேர்ந்த் சரஸ்வதி பட்டேல் என்பவர் தெரியவந்தது.. இவரது கணவர், ராம் கிஷோர் பட்டேல்தான், சரஸ்வதியை கொன்றுள்ளதும் உறுதியானது.. இதையடுத்து, ராம் பட்டேலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அப்போது போலீசில் அவர் தந்த வாக்குமூலம் அதிர செய்துள்ளது.. இந்த தம்பதிக்குள் எப்போதுமே தகராறு வந்து போகுமாம்..

டவுட்ஸ்
இதனால் ஒருகட்டத்தில் இருவருமே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது... அந்த சமயத்தில் சரஸ்வதியின் நடத்தையில் ராம் கிஷோருக்கு சந்தேகம் வந்துள்ளது.. இதனால் சில நாட்கள் பேசாமல் இருந்தவர்கள், இந்த சந்தேகம் காரணமாக, மறுபடியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.. சந்தேகம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனதால், ஒரு நாள் சரஸ்வதியை தைலமரக் காட்டுக்குள் அழைத்து வந்து கோடாரியாலேயே வெட்டி சாய்த்துவிட்டாராம். உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி உள்ளார்..

6+35+2 பீஸ்கள்
தலை மற்றும் உடல் வேறாக வெட்டி, அந்த காட்டிற்குள்ளேயே வெவ்வேறு பகுதியில் புதைத்துள்ளதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. இதையடுத்து தொடர்ந்து ராம் கிஷோரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. டெல்லி ஷ்ரத்தா கொலையில் 35 துண்டுகள், உபி முன்னாள் காதலி கொலையில் 6 துண்டுகள், வங்கதேசத்தில் இந்து பெண்ணை 5 துண்டுகள், இப்போது மத்திய பிரதேசத்தில் 2 துண்டுகள் என சைக்கோ கொலையாளிகள் நாட்டு மக்களை அதிர வைத்து வருகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications