பர்னிச்சர் வியாபாரி குடும்பத்தில் பயங்கரம்..ஒரே வீட்டில் ஏழு பேர் தற்கொலை..உருக்கமான கடிதம்சிக்கியது
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பர்னிச்சர் வியாபாரி குடும்பத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினர் ஆறு பேர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் தூக்கி தற்கொலை செய்திருப்பது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகதன்காவைச் சேர்ந்தவர் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா, இவர்களுக்கு திஷா, காவ்யா மற்றும் குஷால் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சூரத்தின் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் மணீஷ் சோலங்கியின் தந்தை கானு, தாய் ஷோபா ஆகியோரும் வசித்து வருகிறார்கள்.

மணீஷ் சோலாங்கி சூரத்தின் பலன்பூர் பகுதியில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்கள். கட்டில், பீரோ, கதவு, ஜன்னல், சோபா, சேர்கள் உள்பட பல்வேறு பர்னிச்சர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரிடம் 35 பேர் வேலை செய்து வந்தார்கள். இந்நிலையில் இன்று காலை மணிஷ சோலாங்கிக்கு தொழிலாளர்கள் போனில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் அங்கும் யாருமே போனை எடுக்கவில்லை..இதையடுத்து வீட்டிற்கு போய் பார்த்துள்ளார்கள்.. வீட்டில் யாருமே கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், மணீஷின் வீட்டில் ஜன்னலை உடைத்து பார்த்த போது அவர்கள் அனைவரும் பிணமாக கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சூரத் போலீசார் சம்பவம் நடந்த பலன்புர் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பிற்கு விரைந்து வந்தனர். அங்கு பர்னிச்சர் வியாபாரி மணீஷ் சோலங்கியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து கிடந்தனர். - திஷா, காவ்யா மற்றும் குஷால் என மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். மணீஷ் சோலங்கி மட்டும் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அனைவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மணீஷ் சோலங்கி குடும்பத்துடன் இறந்தது குறித்து இதுவரை எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து மணீஷ் சோலங்கி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் கடன் தொல்லை காரணமாக இந்த துயர முடிவினை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று யார் பெயரையும் குறிப்பிடவில்லை.. கடன் அதிக அளவில் வாங்கி தொழில் செய்த மணீஷ் சோலங்கி, நஷ்டம் அடைந்த நிலையில், பண நெருக்கடியில் தவித்து வந்துள்ளார். இதனால் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்த சம்பவம் குஜராத்தின் சூரத் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications