சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்து பெங்களூர் டொயோட்டா நிறுவன ஊழியர்கள் 7 பேர் சாவு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே ஏரியில் கார் கவிழ்ந்ததில் பெங்களூரை சேர்ந்த டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவன ஊழியர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரையடுத்த பிடதி தொழில்பேட்டையில் உள்ளது டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம். இங்கு பணியாற்றும், சுமார் 10 ஊழியர்கள் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு ஸ்கார்பியோ காரில் சிக்கமகளூருக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த கார் நள்ளிரவு 1.20 மணி்க்கு ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டனா தாலுகாவிலுள்ள ஜானவாரா என்ற கிராமத்தின் அருகில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஏரியில் விழுந்தது.
2 மணி நேரங்கள் கழித்த பிறகே, சிலர், ஏரியில் கார் மிதப்பதை பார்த்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து அதை வெளியே எடுத்துள்ளனர். அதற்குள், உள்ளேயிருந்த 7 பேர் உயிரிழந்திருந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அவர்கள் ஐசியூவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கார்த்திக் (23), சதீஷ் (24), ஜனார்தன் (22), திலீப் (24), ஜெயந்த் (23), சிவசாமி (24), ராஜு (24) என தெரியவந்துள்ளது. பிரசாந்த், பிரசன்னா, ரகு ஆகிய மூன்று பேர் சிகிச்சை பெற்றுவருபவர்கள் பெயர்களாகும்.
ஏரி கரையில் தடுப்புவேலி அமைக்காமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications