For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தம் 70 தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள்.. காஷ்மீரிலிருந்து ஆக்ராவுக்கு 'தூக்கி' சென்ற மத்திய அரசு

Google Oneindia Tamil News

ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருந்து சுமார் 70 தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் சிறப்பு விமானத்தின் மூலம் ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

70 Terrorists and separatists from Kashmir shifted to Agra

இதையடுத்து காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு அதிரடி தகவல் இன்று வெளியாகி உள்ளது. அதாவது காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, செயல்பட்ட பாகிஸ்தான் ஆதரவு, பிரிவினைவாதிகள் மற்றும் அங்கு சிக்கிய தீவிரவாதிகள் என மொத்தம் 70 பேர் சிறப்பு விமானத்தின் மூலம் காஷ்மீரில் இருந்து ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Srinagar- Around 70 terrorists and hardcore pro-Pakistan separatists from Kashmir valley have been shifted to Agra. The terrorists and separatists were shifted in a special plane provided by the Indian Air Force: Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X