அரசு பேருந்து மீது மோதிய சரக்கு லாரி! சம்பவ இடத்திலேயே 8 பேர் பலி.. சித்தூரில் ஷாக்
அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில், அரசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சித்தூர் மாவட்டத்தின் பலமனேரின் மொகாலி காடு பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டிருக்கிறது. திருப்பதியிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,

"பலமனேரிலிருந்து சித்தூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்துக்கு பின்புறம் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது வேகமாக மோதியது" என்று கூறியுள்ளனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
30 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில், 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
விபத்து குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications