தூங்கிய சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த காமுகன் - சிசிடிவி வீடியோ சிக்கியது!
டெல்லி: டெல்லிக்கு அருகே தனது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவரை, அங்கு வந்த காமுகன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லி அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் தேதி 8 வயது சிறுமி தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் சிறுமியை வாயை மூடி தூக்கி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், தனது வெறியை தீர்த்துக்கொண்ட வெறிபிடித்த அந்த காமுகன், மோசமான நிலையில் சிறுமியை அதே இடத்திலேயே திரும்ப விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். உடல்நிலை மோசமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்படட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அண்டை வீட்டியில் வைத்திருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் சிறுமியை கடத்திச் செல்லும் காட்சி பதிவானது தெரியவந்தது. அதன் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற கொடூரமான மிருகங்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க, இந்தியா அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சமீபத்தில் இந்தோனேஷியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்து அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம், மரண தண்டனை மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவது என கடுமையான தண்டனை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications