வேட்டி எப்படி கட்டுவது... ரஷ்ய தலைவரின் மனைவியை தனியாக கூப்பிட்ட ம.பி. மாஜி முதல்வர்!
டெல்லி: வேட்டி எப்படி கட்டுவது என்று சொல்லிக் காட்டுகிறேன்...தனியே வாருங்கள் என்று ரஷ்ய தலைவர் ஒருவரின் மனைவியிடம் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறியதை அவரே வெளியிட்டு தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
பொது இடங்களில் தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது இந்த புதிய சர்ச்சை

மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சரான பாபுலால் கவுர், பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது வேட்டியின் பெருமை குறித்து அவர் பேசினார்.
தான் ரஷ்யா சென்றபோது வேட்டி கட்டியிருந்ததாகவும், அதை பார்த்த ரஷ்ய தலைவர் ஒருவரின் மனைவி, வேட்டியை எப்படி கட்டுகிறீர்கள், பெல்ட்டும் இல்லாமல், ஜிப்பும் இல்லாமல் எப்படி அது இடுப்பில் நிற்கிறது என்று கேட்டதாகவும் பேசினார்.
அதற்கு, பொது இடத்தில் எப்படி வேட்டி கட்டுவது என்று கூற முடியாது என்றும், தனியாக வந்தால் எப்படி வேட்டி கட்டுவது என்று காட்டுகிறேன் என்று தான் கூறியதாகவும் கவுர் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் இந்த பேச்சு, மகளிர் உரிமை அமைப்புக்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து அவருக்கெதிராக போராட்டக் களம் இறங்க அந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications