போதையில் 5 வயது தம்பியின் கழுத்தை அறுத்த 9 வயது சிறுமி
Subscribe to Oneindia Tamil
ஜம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மது அருந்திய மயக்கத்தில் 9 வயது சிறுமி தனது 5 வயது தம்பியின் கழுத்தை அறுத்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள செல்தூரி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பழங்குடியினர் மத்தியில் பிரபலமாக உள்ள ஹடியா என்ற ஒரு வகை மதுவை குடித்துள்ளார். இதையடுத்து போதை ஏறிய சிறுமி தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது தம்பியின் கழுத்தை அறுத்துவிட்டார்
அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றபோது தான் இந்த சம்பவம் நடந்தது. சிறுவன் கழுத்தறுபட்ட உடன் அவர்களின் உறவினர்கள் அங்கு கூடினர். அவர்களிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications