அதுஎப்படி திமிங்கலம்.. எல்லா பாடத்திலுமே.. ஒன்பது கிரங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. சபாஷ் பெற்றோர்!
மும்பை: இதை விட சிறந்த பூஸ்ட் அப் ஒரு மாணவனுக்கு எதுவும் இருக்காது. தங்கள் மகன் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ் ஆனதை உற்சாகமாக கொண்டாடி உள்ளார்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெற்றோர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் சிலர் உடனே மனமுடைந்து விபரீத முடிவை தேடுவார்கள். அதே போல் குறைந்த மதிப்பெண் எடுத்த பையனை பெற்றோர் திட்டுவார்கள். அச்சிறுவனை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவார்கள்.

ஆனால் இதுபோன்று எதுவும் செய்யக்கூடாது என்பதே சரியானது. அவர்களை உற்சாகப்படுத்தி தேர்ச்சி பெற வைக்க வேண்டும். படிப்பு ஒருவருக்கு வரவில்லை என்றால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல, சொல்லிக்கொடுத்த ஆசிரியர், பெற்றோர், சமூகம் என எல்லோருமே தான் காரணம். 10ம் வகுப்பு தேர்வில் தோற்று பின்னர் அரியரில் பாஸ் ஆனவர்கள் பலர் ஐஏஎஸ் தேர்விலேயே வென்று கலெக்டர் ஆகி இருக்கிறார்கள். பலர் உயர் காவல்துறை அதிகாரிகளாக உள்ளார்கள். பலர் தொழில் அதிபர்களாக உள்ளார்கள்.
படிப்பு தான் உலகத்தில் எல்லாம் என்று இல்லை. படிப்பு வாழ்க்கையின் ஒரு அங்கம் அவ்வளவு தான். படிப்பை தாண்டி உலகில் பல விஷயங்கள் இருக்கின்றன. சரி விஷயத்திற்கு வருவோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. மும்பையைச் சேர்ந்த மாணவர் விஷால் தான் எழுதிய 6 பாடங்களிலும் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் தங்களது மகன் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வில் இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய பெற்றோரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் விஷால், எல்லா பாடத்திலும் அதிகபட்சமாக எடுத்த மதிப்பெண்ணே 35 தான்.
मुंबई के रहने वाले 10वीं के एक छात्र ने परीक्षा में 35% मार्क्स हासिल किए.
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) June 8, 2023
लेकिन उसके माता-पिता ने दुखी या नाराज होने की बजाय उसकी सफलता को सेलिब्रेट किया. pic.twitter.com/fAa6szayiF
இதை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடி உள்ளார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
என் பிள்ளை நிறைய மார்க் எடுக்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்களுக்கு மத்தியில் குழந்தை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்" என மாணவரின் தந்தை கொண்டாடியது குறித்து பேசியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. படிப்பில் முதலில் வருபவர்தான் வெற்றியாளர் இல்லை. படித்தாலே வெற்றியாளர் தான்.. படியுங்கள்.. படியுங்கள்.. அதுதான் வாழ்க்கையின் ஆகச்சிறந்த வெற்றி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications