தாய் இறந்தது தெரியாமல் பசியில் தாய்ப்பால் குடித்த குழந்தை.. இதயத்தை நொறுக்கும் வீடியோ
மத்திய பிரதேசத்தில் ரயில்வே டிராக் அருகே தாய் இறந்தது தெரியாமல் 17 மாத குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகியுள்ளது.
தமோக்: மத்தியப்பிரதேசத்தில் ரயில்வே டிராக் அருகே தாய் இறந்தது தெரியாமல் பசியால் தவித்த குழந்தை அவரிடம் தாய்ப்பால் குடித்தது. இதயத்தை நொறுக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இன்று காலை ரயில்வே டிராக்கில் ஒரு பெண்மணி இறந்துகிடந்துள்ளார். இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு பக்கத்தில் அவரது குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். பசியால் தவித்த அந்த 17 மாத குழந்தை தாய் இறந்துவிட்டார் என்பதை அறியாமல் பால் குடித்துக்கொண்டிருந்ததை கண்டு கண்கலங்கினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த ஊழியர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், அவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது, ரயில்வே போலீசாரிடம் உள்ள அந்த குழந்தை பத்திரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என்றும ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications