டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை.. சிசிடிவி காட்சியால் அம்பலம்
Recommended Video

டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயது இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காமிராக்கள் மூலம், இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு இச்சம்பவம் மேலும் வலு சேர்க்கிறது.

தப்பிய பெண்
மத்திய டெல்லியிலுள்ள ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் இந்த மோசமான சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை பகுதியில் பெண் பத்திரிகையாளர் படிக்கட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பக்கமாக இருந்து வந்த அந்த நபர், பெண்ணின் அந்தரங்க உறுப்பை குறிவைத்து பிடிக்கிறார். முதலில் சற்று தடுமாறிய அந்த பெண், பிறகு அவனது கையை தட்டிவிடுகிறார்.

விரட்டிய பெண்
இதையடுத்து பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடுகிறார். ஆனால், தீரமிகுந்த அந்த பெண் விடவில்லை. அவனை துரத்தியபடியே ஓடுகிறார். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தன.

போலீசார் தீவிரம்
நடந்த சம்பவத்தை சும்மாவிடவில்லை அந்த பெண் பத்திரிகையாளர். காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையயில் இறங்கினர். இதற்காக சுமார் 5000 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
|
வீடு வீடாக சோதனை
மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டியுள்ள குடிசை பகுதியில் சல்லடை போட்டு போலீசார் தேடினர். அப்போது அகிலேஷ் குமார் என்ற அந்த குற்றவாளி பிடிபட்டார். அவர் டீ ஸ்டால் ஒன்றில் உதவியாளராக வேலை பார்ப்பவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதே நாளில் மற்ரொரு பெண்ணையும் அகிலேஷ்குமார் சீண்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications