மதுவை வாயில் ஊற்றி.. இருட்டில் நீண்ட கைகள்! ஆண்டனியான ஆட்டோக்காரர்! மயங்கி சரிந்த பெண், பதறிய போலீஸ்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் உதய்பூரில் ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது.
படிப்பறிவில் பின்தங்கியுள்ள பீகார் ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகரான டெல்லி ஜார்கண்ட் ஒடிசா ஆகிய மாநிலங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெளி உலகுக்குத் தெரிந்தது மட்டும்தான்.

பாலியல் பலாத்காரம்
உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு ஆடம்பரமான மாளிகைகள் நிரம்புயுள்ள காலனிக்கு அருகிலுள்ள .ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர் ரெட்டி ஸ்டாண்ட் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது. நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் சர்வசாதாரணமாக இருப்பதால் அதில் இரண்டு பயணிகளுடன் ஒரு ஆட்டோவைப் பார்த்து, சவினா காலனியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக அவர் வாகனத்தில் ஏறினார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
கிரிஜா வியாஸ் பெட்ரோல் பங்கில் அவருக்கு முன் மற்ற இரண்டு பயணிகள் இறங்கினர். பயணிகளை இறக்கிவிட்ட பிறகுதான் அப்பெண்ணுக்கு அந்த அவலம் அரங்கேறியது. போலீசார் அளித்த தகவலின்படி, ஆட்டோ டிரைவர் தனது வாகனத்தில் பெண் தனியாக இருப்பதைக் கண்டு, மதுபானக் கடையில் நிறுத்தி, நண்பரை அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் இருவரும் அப்பெண்ணை தாக்கி, விஐபி காலனிக்கு அருகில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மது அருந்த வைத்து, மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை
கொடூரமான குற்றத்தைச் செய்யும் போது, ஆட்டோ டிரைவர் மேலும் தனது சில நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அப்பெண் உதவிக்காக கூச்சலிட்ட போதும், ஆனால் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்ததால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் நான்கு பேரும் அப்பெண்ணை வண்டில் ஏற்றி நகருக்குள் வந்ததும், தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் எப்படியோ ஒரு காவல் நிலையத்தை அடைந்து பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications