திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தையைத் தொடர்ந்து கரடி நடமாட்டம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்
திருப்பதி: அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் சவுசிக் காயங்களுடன் மீட்கப்பட்டார். நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் 24ம்தேதி முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதில், லட்ஷிதாவின் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான மரபணு உள்ளதா? என்றும், லட்ஷிதாவின் மரபணுவுடன் ஒத்துபோகிறதா? என்பதையும் அறிந்து அதனை தனிமைப்படுத்த 2 சிறுத்தைகளுக்கும் ரத்தம், நகம், முடி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும், மரபணு சோதனை முடிவுகள் தெரியவில்லை. இந்த நிலையில், கரடியும் அவ்வப்போது நடைபாதையில் வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதையொட்டி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி இருந்தது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
இதனிடையே அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வனத்துறை கேமராவில் 4வது முறையாக மீண்டும் சிறுத்தை பதிவாகி இருப்பது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதே சமயம் அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். வன விலங்குகளின் நடமாட்டத்தை அடுத்து ஏழுமலையானை பாதயாத்திரையாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications