ஹைதராபாத் ஹோட்டலில் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.: எங்கு கிடைத்தார் தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை காணாமல் அனைவரும் பதட்டம் அடைந்துவிட்டனர்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

செல்போன்
ஹோட்டலில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் இருந்தால் பாஜகவினர் யாராவது தொடர்பு கொண்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.

எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில் ஒரு எம்.எல்.ஏ. மாயமானது தெரிய வந்தது. ஹோட்டல் முழுவதும் அவரை தேடியுள்ளனர்.

பார்
பார், கழிவறை, உணவு உண்ணும் இடம் என்று அனைத்து இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவர் ஹோட்டலில் இருந்து வெளியே சென்றாரா என்று பவுன்சர்களிடம் கூட கேட்டோம். அவர் வெளியே செல்லவில்லை என்று அவர்கள் கூறினார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளம்
எங்கு தேடியும் அவரை காணவில்லையே என்றபோது அவர் நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த எம்.எல்.ஏ. நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்ய ஹோட்டலில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவரை தேடி அலைந்து டென்ஷனாகிவிட்டனர். நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பெங்களூர் வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications