வன்புணர்வு செய்யப்பட்டு கொலை.. மே.வங்கத்தில் பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. மக்கள் போராட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு கடுமையான கலவரம் ஏற்பட்டு உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் சோனாப்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலிகுரி அருகே இருக்கும் இந்த கிராமத்தில் கழிப்பறைக்கு சென்ற 10ம் வகுப்பு பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மரத்திற்கு அடியில் இந்த சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் கண்டிபிடிக்கப்பட்ட செருப்பு உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் எடுத்து சென்று விசாரித்து வருகிறார்கள். போலீசார் இதில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று கூறி இன்று அங்கு கடுமையான கலவரம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய கலவரம் இரவு வரை நடந்தது. அங்கு இதனால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

சிலிகுரி பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் கலவரம் நடந்தது. அங்கு வந்த போலீசார் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் உள்ளது. இதில் மூன்று போலீஸ் வாகனங்கள், ஒரு அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியே கலவர காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications