கள்ளக்காதலி வீட்டிலேயே கிடந்த கணவன்.. தட்டிக்கேட்ட மனைவியை பீஸ் பீஸாக வெட்டி பார்சல் செய்த கொடூரம்!

டெல்லியில் கள்ளக் காதலி வீட்டிலேயே கிடந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கள்ளக் காதலி வீட்டிலேயே கிடந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான ஜூகி. இவரது கணவர் சஜித் அலி அன்சாரி பட்டதாரி பொறியாளர் ஆவார்.

குருஷேத்ரா கல்லூரியில் படிக்கும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வேலையில்லாத கணவர்

வேலையில்லாத கணவர்

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். டெல்லியில் வசித்து வந்த இவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேலையை இழந்த சஜித் அலி, கிடைத்த சிறுசிறு வேலைகளை செய்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த வருமானம் போதாமல் இருந்ததால் அந்த வேலைகளையும் விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

கணவரின் கள்ளக்காதல்

கணவரின் கள்ளக்காதல்

இதனால் இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்து வந்த ஜூகி கணவரை ஏதாவது வேலைக்கு போகும்படி வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சஜித் அலிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலி வீட்டிலேயே..

கள்ளக்காதலி வீட்டிலேயே..

இதனால் சஜித் அலி வீட்டிற்கு வருவதை தவிர்த்து கள்ளக்காதலி வீட்டிலேயே கிடந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வீட்டிற்கு வந்த கணவனிடம் ஜூகி இதுகுறித்து கேட்டார். அப்போது இருவருக்குள்ளும் தகராறு முற்றியது. கணவனின் கள்ளக்காதல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டியுள்ளார் ஜூகி.

7 துண்டுகளாக வெட்டி

7 துண்டுகளாக வெட்டி

இதனால் ஆத்திரமடைந்த சஜித் மனைவியை அடித்துக்கொன்றுள்ளார். பின்னர் செய்வதறியாமால் தவித்த சஜித் தனது 2 சகோதரர்களுக்கும் போன் செய்து வரவழைத்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து ஜூகியின் உடலை 7 துண்டுகளாக வெட்டி அட்டைப்பெட்டியில் வைத்து அங்குள்ள ஒக்லா டேங்க் பகுதியில் வீசியுள்ளனர்.

அடையாளம் காண முடியாமல்

அடையாளம் காண முடியாமல்

துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அட்டைப்பெட்டிகளை ஆய்வு செய்யவே அதில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் அடையாளம் காண முடியாமல் தவித்தனர்.

தோல்வியடைந்த போலீஸ்

தோல்வியடைந்த போலீஸ்

உடல் பாகங்களில் இருந்த துணியை வைத்து அது எந்த கடையில் வாங்கப்பட்டது, யார் வாங்கியது என்ற ரீதியில் விசாரணையை தொடங்கினர் போலீசார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஓனரின் அட்டைப்பெட்டி

ஓனரின் அட்டைப்பெட்டி

பின்னர் அட்டைப்பெட்டியை வைத்து விசாரணை நடத்திய போலீசார் அந்த அட்டைப் பெட்டி எங்கிருந்து வந்தது? யாருக்கு வந்தது? என்ற அடிப்படையில் விசாரணை முடுக்கிவிட்டனர். அப்போது ஜூகி தங்கிருந்த வீட்டின் உரிமையாளரான ஜாவேத்துக்கு யூஏஇயிலிருந்து அட்டைப்பெட்டிகள் வந்ததும், அதனை சஜித் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

வீட்டை காலி செய்த கணவன்

வீட்டை காலி செய்த கணவன்

இதையடுத்து சஜித் தனது மனைவியை கொலை செய்ததை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ய வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் சஜித் அவசரஅவசரமாக வீட்டை காலி செய்துவிட்டு பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் வீட்டில் ரத்தக்கறை படிந்ததை கண்டு கொலை நடந்ததை உறுதி செய்தனர்.

காதல் மனைவி கொலை - அதிர்ச்சி

காதல் மனைவி கொலை - அதிர்ச்சி

இதைத்தொடர்ந்து அவரது சகோதரர் வீட்டில் பதுங்கியிருந்த சஜித்தை கைது செய்த போலீசார், கொலை குறித்து ஜூகி குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளும் ஜூகி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதலால் காதல் மனைவியை கணவன் துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+