மம்தா பானர்ஜியின் அலட்சிய அரசாங்கத்திற்கு எதிராக.. ஒன்று திரண்ட மக்கள்.. நேரடி ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு.. கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுவதும் இந்த சம்பவம் மக்கள் இடையே கொதிப்பையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்கொண்ட விதத்திலும்.. விசாரணை நடத்திய விதத்திலும் முழுக்க முழுக்க மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு மீதே தவறு உள்ளது. மக்களுக்கு இதனால் மம்தா பானர்ஜி மீதும், அவரது நிர்வாகம் மீதும் கோபம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் மருத்துவ சமூகத்தை மட்டுமின்றி பொதுமக்களையும் உலுக்கி உள்ளது. இந்த வழக்கை தவறாக கையாண்ட மேற்கு வங்க அரசு மற்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பதில் அனைத்து தரப்பு மக்களும்.. ஏன் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைத்துள்ளது.

kolkata

நாடு தழுவிய எதிர்ப்புகள்: ஒன்இந்தியா உடன் பகிரப்பட்ட முக்கிய தகவல்கள்

இது தொடர்பாக பல போராட்டக்காரர்கள் மற்றும் மக்களிடம் ஒன்இந்தியா சார்பாக பேசினோம். இந்த கொடூர சம்பவம் குறித்தும்.. அதை மேற்கு வங்க அரசு எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினோம். இந்த வழக்கை அரசு கையாண்ட விதத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மருத்துவத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவர்கள் முதலில் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில்.. மீண்டும் போராடுவதாக அறிவித்தனர். மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் படும் கஷ்டத்தையும்.. அதை அரசு எதிர்கொண்ட விதத்தையும் பார்த்து.. போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். மருத்துவர் சமூகத்துடன் துணை நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து.. மீண்டும் போராட்டத்தை அறிவித்து அதை தொடர்ந்தனர். டெல்லி மட்டுமல்ல மொத்த நாடும் இந்த போராட்டத்தில் கரம் கோர்த்தது.

பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் அஷ்வினி, இந்த சம்பவத்தை அடுத்து பெண் மருத்துவர்களின் அச்சத்தையும் கவலையையும் நம்மிடம் வெளிப்படுத்தினார், "மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரமான சம்பவம் எங்களை மிகவும் பயமுறுத்தியுள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு தேவை, மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்., என்று கோரிக்கை வைத்தார். அவரது வார்த்தைகள் மருத்துவர்கள் தங்கள் பணியிடங்களில் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

kolkata

பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஷாமா ராவ் மேலும் கூறுகையில், "டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதுதான் முக்கிய பிரச்சனை. இந்த சம்பவத்தில் கூட, இன்னும் நீதி கிடைக்கவில்லை. எங்கள் ஜூனியர்களை பயமின்றி வேலை செய்யச் சொல்ல கூட எங்களால் முடியவில்லை" என்றார்.. இந்த ஏமாற்றம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, அவர்கள் இப்போது தங்களுக்கு இனி பணியிடத்தில் பாதுகாப்பு இருக்குமா என்று அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு: நம்பிக்கையின் ஒளிக்கீற்று

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு.. இந்த விவகாரத்தை தீவிரமாக்கியது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் , விசாரணையில் குறைபாடு, கிரைம் சீனை கூட பாதுகாக்காமல் போனது, கலவரத்தை தடுக்காமல் போனது, போராட்டத்தை முறையாக கையாளாமல் போனது என்று பல காரணங்களுக்காக மேற்கு வங்க அரசாங்கத்தின் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மீது இந்த விவகாரம் காரணமாக மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையும் ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்புக்கான தேசிய நெறிமுறையை உருவாக்க 10 பேர் கொண்ட பணிக்குழுவை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். பணிக்குழு மூன்று வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையையும் இரண்டு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா அரசுக்கு இது தேசிய அளவில் ஏற்பட்ட அவமானம்.. சவுக்கடி!

kolkata

மம்தா பானர்ஜி நிர்வாகத்தின் தவறு: அலட்சியத்தின் உச்சம்

பொதுமக்கள் மம்தா அரசு மீது கோபம் அடைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு இந்த வழக்கை கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில், தாமதம், மருத்துவமனை அதிகாரிகள் இந்த சம்பவத்தை தற்கொலை என்று குறைத்து மதிப்பிட முயன்றது, மருத்துவமனை பிரின்ஸ்பால் மீது எடுக்கப்பட்ட தாமதமான நடவடிக்கை, மருத்துவமனையில் நடந்த வன்முறைகள், அதை கையாள தவறியது, அனைத்தும் மாநில நிர்வாகத்தின் தோல்வி.. மம்தா ஆட்சியின் தோல்வியையே காட்டுகிறது!

ஹைதராபாத்தில் இருந்து நம்மிடம் பேசிய ஒருவர், "கொல்கத்தா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை மம்தா அரசு சரியாக கையாளத் தவறிவிட்டது. உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை, விசாரணையின் போது பல குறைபாடுகள் காணப்பட்டன. விசாரணை நியாயமாக நடக்கவில்லை. விசாரணையில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தின் உண்மையான குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அஞ்சும் அளவிற்கு மம்தா இந்த விவகாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார்", என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் விரைவான ஆக்சன்;

சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தா சம்பவத்தை குறிப்பிட்டு, கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விரைவான விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற அழைப்பு விடுத்தார்.

kolkata

பிரதமர் மோடியின் கருத்து மேற்கு வங்ல அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதாகக் கருதப்படுகிறது, இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், அரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்தது. நீதியை உறுதி செய்வதை விட.. அரசியல் செய்வதிலேயே மேற்கு வங்க மாநில அரசு அதிக ஆர்வம் காட்டியது. இதை பார்த்து சலிப்பும் கோபமும் அடைந்து இருந்த மேற்கு வங்க மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் பேச்சு பெரிய நம்பிக்கையை அளித்தது!

மம்தா அரசுக்கு எதிராக: ஒன்று திரண்ட தேசம்

நாடு முழுவதும், மம்தா பானர்ஜி நிர்வாகத்தின் தோல்விகளுக்கு எதிராக குரல்கள் எழுந்து வருகின்றன. மொத்த நாடே இதில் ஒன்று திரண்டு உள்ளது. கொல்கத்தா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை தவறாக கையாண்ட விவகாரம் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ளது. மம்தாவிற்கு எதிராக ஒன்றுபட்ட கோபம் மொத்த நாடு முழுக்க ஏற்பட்டு உள்ளது. மம்தா இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர் தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மக்கள் ஒன்று திரண்டு கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக மருத்துவ சமூகம் பாதுகாப்பு, நீதிமன்றம், மாணவ சமூகம் மம்தா மீது கோபம் அடைந்துள்ளது.

மாற்றம் வேண்டும்...பாதுகாப்பு வேண்டும்.. நீதி வெல்ல வேண்டும் என்று குரல் கொடுத்து.. இந்திய மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள்... மக்களின் குரல் ஓயாது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+