மைசூரு மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை.. 400 வருட சாபம் முடிவுக்கு வந்தது!
மைசூரு மன்னர் குடும்பத்தில் புதிதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது.
Recommended Video

பெங்களூர்: மைசூரு மன்னர் குடும்பத்தில் புதிதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த குடும்பத்தின் மீது இருந்த சாபம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 400 வருடங்களாக அந்த குடும்பத்தில் ஆண் வாரிசே இல்லை. இது முன்பொரு காலத்தில் கொடுக்கப்பட்ட சாபம் காரணமாகவே நடந்தது என்று கூறப்பட்டது.
தற்போது இந்த ஆண்குழந்தை காரணமாக அந்த குடும்பமே சந்தோசத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அந்த குழந்தையை குடும்பமே தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆட்சி கை மாறியது
விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த திருமலைராஜா 1612ம் ஆண்டு மைசூர் நகரத்தை நிலையாக ஆண்டு கொண்டு இருந்தார். ராஜா உடையார் என்பவர் இவர் மீது போர் தொடுத்து அவரது ஆட்சியை கைப்பற்றினார். அந்த ராஜாவுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள், வேலையாட்கள் எல்லோரும் அரசவையில் இருந்து நீக்கப்பட்டார்கள். மொத்தமாக ஆட்சி அமைப்பே அதன்பின் மாற்றப்பட்டது.

மோசமான சாபம்
இந்த நிலையில் திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா அதே போரின் போது யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தில் இருந்து ஓடி சென்றுள்ளார். மேலும் அவர் ராஜ நகைகள், செப்பு தகடுகளுடன் மறைத்ததாக கூறப்படுகிறது. சில நாள் மறைந்து வாழ்ந்த அவர் பின் தற்கொலை செய்து இருக்கிறார். தற்கொலை செய்யும் முன் அவர் உடையார் பரம்பரைக்கு ஆண் குழந்தையே பிறக்க கூடாது என சாபம் அளித்து இருக்கிறார்.

ஆண் குழந்தை இல்லை
இந்த நிலையில் அந்த சாபம் அப்படியே நடந்து இருக்கிறது. கடந்த 400 வருடமாக அந்த குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு கூட பிறக்கவில்லை. மேலும் இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் தூரத்து உறவினர்களிடம் இருந்து ஆண் குழந்தையை தத்து எடுத்து இருக்கிறது அந்த ராஜா குடும்பம். ஆனால் தத்து எடுக்கப்பட்ட நபர்களுக்கும் ஆண் குழந்தை பிறக்காமல் போய் உள்ளது.

சாபம் தீர்ந்தது
இந்த நிலையில் மைசூரின் 27 வது மன்னரான யதுவீர கிருஷ்ணதத்தாவின் மனைவி திரிஷாதேவிக்கு நேற்று குழந்தை பிறந்தது. குடும்பமே ஆண் குழந்தை பிறக்குமா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்த போது அவர்கள் ஆசைப்படியே ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குடும்பம் தங்கள் மீது இருந்த 400 வருட சாபம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications