6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் 6 தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக இளம்பெண் அதிகாரி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
கொடிய கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

விலங்குகளை துன்புறுத்தல்
இப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் சிலர் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாய், பூனை போன்ற செல்லபிராணிகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்துகின்றனர். கேரளாவிலும், தமிழகத்திலும் யானைகளை துன்புறுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் 6 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண் அதிகாரி புகார்
ஒடிசா மாநிலம் புர்லா மாவட்டத்தில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் அதிகாரி ஒருவர் இந்த தெருநாய்கள் தனது காரின் இருக்கையை சேதப்படுத்தி விட்டதாக நிறுவன பாதுகாவர்களிடம் புகார் கூறினார்..

பரிதாபமாக இறந்த தெரு நாய்கள்
இதனை தொடர்ந்து மறுநாளே அந்த பெண் அதிகாரியின் வீட்டின் முன்பு 6 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. பெண் புகார் கூறிய மறுநாளே நாய்கள் இறந்து கிடந்ததனால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக புர்லா காவல் நிலையத்தில் மகாநதி நிலக்கரி நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார்.

மேனகா காந்தி களமிறங்கினார்
சம்பல்பூர் மாவட்ட விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களும் புகார் அளித்து இருந்தனர். ஆனால் அந்த பெண் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விலங்குகள் நல வாரிய தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மேனகா காந்தி, சம்பல்பூர் எஸ்.பி.யிடம் பேசி இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேலும் பர்லா காவல் நிலைய இன்ஸ்பெக்டருடனும் பேசினார். இதனையடுத்து தெரு நாய்கள் இறந்து கிடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications