கோவாவில் முதல் முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி… ஒரு ‘சீட்’ கூட கிடைக்கல
யூனியன் பிரதேசமான கோவாவில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
பனாஜி: கோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு இடத்தைக் கூட ஆம் ஆத்மி கட்சி பெறவில்லை.
கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக, ஆண்ட கட்சியான காங்கிரஸ் எதிர் எதிராக நின்று தேர்தலில் களம் கண்டன. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலில் களம் கண்டது.
கோவாவில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெற முடியவில்லை.

ஊழல் ஒழிப்பு
கோவா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டது. அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு 90 நாட்களில் அமைப்பு முறை கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக கண்காணிப்பை அதிகரிப்பது, மின்னணு ஆளுகையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் கூறினார்.

நிலமோசடி வழக்கு
இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நில மோசடி வழக்கு ஒன்றும் உள்ளது. கோவா மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக, திட்டமிட்டே பழி வாங்கும் நடவடிக்கையாக எல்விஸ் கோம்ஸ் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ஒரு ‘சீட்’டும் இல்லை
53 வயதாகும் எல்விஸ் கோம்ஸ், கோவா சிறைத்துறை முன்னாள் ஐ.ஜி.யாக இருந்து, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர்தான் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியால் அறிவிக்கப்பட்டார். அவர் கூட வெற்றியை பெறவில்லை என்பதுதான் சோகம்.

நேருக்கு நேர்
முதல் முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை. அங்கு நேரடியாக பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலோன போட்டியாகவே உள்ளன. அங்கு காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications