2ஜி ஊழலில் சிக்கிய ஆ.ராசாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும் ஆம் ஆத்மி!
டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா போட்டியிட்டால் அவருக்கு எதிராக தங்களது வேட்பாளரை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
நேற்று ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய்சிங்.

அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுதும் 350 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் போட்டுயிட உள்ளோம். ஊழல் புகாரில் சிக்கியுள்ள மேலும் 14 மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராகவும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 162 எம்.பி.,க்கள் மீது குற்ற வழக்குகளும், 73 எம்.பி.,க்கள் மீது கடுமையான குற்றவழக்குகளும் பதிவாகி உள்ளதால் அவர்களுக்கு எதிராகவும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications