டென்மார்க் பயணி பலாத்காரம்: பெண் பயணிகளுக்கு பிரிட்டன், பிரான்ஸ் அறிவுரை
டெல்லி: டெல்லியில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ் பெண் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த டென் மார்க் நாட்டைச் சேர்ந்த 51 வயது பெண் டெல்லியில் ஒரு கும்பலால் கத்திமுனையில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இச்சம்பவம் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மீதுதான் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.
பிரிட்டன்- பிரான்ஸ்
இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுலாச் சென்றுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்ற அறிவுரையை பிரான்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நற்பெயருக்குக் களங்கம்
பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்ற பல இங்கிலாந்து பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். உடல்ரீதியாகவும், வாய்மொழியாகவும், பல பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிய நிலையிலும், அதுபற்றி பலர் புகார் தெரிவிப்பதில்லை எனவும் பிரிட்டன் கூறியுள்ளது. இது உலகளவில் இந்தியாவிற்கு இருக்கும் நற்பெயரை மேலும் களங்கப்படுத்தும் வகையில் உள்ளது.
பெண் பயணிகளின் பாதுகாப்பு
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகள் குறைவு
இதனால், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதமாகவும், மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகித அளவிற்கும் குறைந்துள்ளது.
பாலியல் பலாத்காரம்
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு 68 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அதேசமயம், 2012ம் ஆண்டு சீனாவிற்கு 13 கோடியே 20 லட்சம் பேரும், சிங்கப்பூருக்கு 1 கோடியே 40 லட்சம் பேரும் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுற்றுலாத்துறை
இதனிடையே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் நான் பெண்களை மதிக்கிறேன்' என்ற பிரச்சாரத்தை மத்திய சுற்றுலாத்துறை துவங்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications