”நீங்க 10 ரூபா கொடுத்தா போதும்” - கட்சியின் கல்லாப் பெட்டி காலி; மக்களிடம் நிதி கேட்கும் கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை நடத்த போதிய பணம் இல்லை என்று கூறி பொதுமக்களிடம் நிதி அளிக்கும்படி கேட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சி தனது அன்றாட நடவடிக்கைகளுக்கே செலவு செய்ய பணமில்லாமல் இருப்பதால் நன்கொடை வழங்கி உதவுமாறு அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சியின் பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டது. நாங்கள் கட்சியை நடத்துவதற்கு பணம் தேவை. கட்சியின் தினசரி நடவடிக்கைகளுக்கு பணம் தேவை. முதல்வராக வந்த பிறகும் கூட மக்களிடம் நன்கொடை கேட்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும்.
தவறான வழியில் அரசியலில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. எனவே நான் உங்களிடம் நன்கொடை கேட்டு நாட வேண்டியதில்லை. ஆனால், நான் அதுபோன்ற ஊழல் பாதையை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. எங்களுக்கு இதுவரை மக்களே பணம் கொடுத்து வந்துள்ளனர்.
நாங்கள் ஒருபோதும் மேசைக்கு அடியில் தெரியாமல் பணத்தை வாங்கியதில்லை. நாங்கள் வாங்கிய ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளது. நேர்மையான அரசியலை நடத்த நீங்கள் கொடுக்கும் ரூபாய்10 கூட உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் தான் சுமார் 540 கோடி ரூபாய் செலவு செய்து டெல்லி அரசின் சாதனைகளையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் பெருமையையும் சொல்லும் விளம்பரத்தை வெளியிட்டது அம்மாநில அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications