ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட் இயக்கம், என்னிடம் ஆதாரம் உள்ளது: சு. சாமி
ஜெய்ப்பூர்: ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட்டு இயக்கம் எனவும், அதற்குத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி.
ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சுவாமி அங்கு நிகழ்த்திய உடையில் இவ்வாறு ஆம் ஆத்மி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது :-
ஆம் ஆத்மி கட்சிக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகள் தவிர, குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த கொள்கையும், குறிக்கோளும் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட்டு இயக்கம் .இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 'ஸ்வராஜ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் நக்சலைட்டுகளின் கொள்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு பகுதியையும் காலனியாக மாற்றி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications