நாயை ஏவி கடிக்க விட்டார்... ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பார்தி மீது மனைவி பரபரப்பு புகார்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு நேரமே சரியில்லை. இப்போதுதான் டெல்லி சட்ட அமைச்சர் கைதானார். இந்த நிலையில், இன்னொரு மூத்த தலைவர் சோம்நாத் பார்தி சிககியுள்ளார். தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து சித்திரவதை செய்கிறார் சோம்நாத் என்று அவரது மனைவி லிபிகா மித்ரா டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சோம்நாத் பார்தி, தன் மீது நாயை ஏவி விட்டதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞரான சோம்நாத் பார்தி, முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவரது மனைவி லிபிகா மித்ரா (26). இவர் நேற்று மாலை டெல்லி மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மனித உரிமை ஆணையர் பர்கா சிங்கைச் சந்தித்து 26 பக்க புகார் மனுவை அளித்தார்.
இதையடுத்து ஜூன் 26ம் தேதி விசாரணைக்கு வருமாறு சோம்நாத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனது புகாரில், எங்களுக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதலே தொடர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும என்னை சித்திரவதை செய்து வருகிறார். அடிக்கிறார். பணம் தராமல் துன்புறுத்துகிறார். எனக்கு விடுதலை வேண்டும். நானும், எனது குழந்தைகளம் நிம்மதியாக வாழ வழி வேண்டும். எனது பிள்ளைகளையும் கூட அவர் அடித்துத் துன்புறுத்துகிறார்.
நான் 7 மாத கர்ப்பமாக இருந்தபோது என் மீது நாயை ஏவி விட்டு அச்சுறுத்தினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார். இவருடன் குடும்பம் நடத்த முடியாது. நானும், எனது 2 குழந்தைகளம் கவுரமாக வாழ வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் லிபிகா.
தற்போது கேரளாவில் உள்ள சோமநாத் பார்தி இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சி தருகிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் பொய்யான புகார்கள். யாரோ அவரது பின்னணியில் உள்ளனர் என்று கூறியுள்ளார் சோம்நாத்.
Allegations of domestic violence if any are baseless n inconceivable. I love my wife n my little children. I urge media 2 respect my privacy
— Adv. Somnath Bharti (@attorneybharti) June 10, 2015 இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவிக்கையில், இது தனிப்பட்ட குடும்ப விவகராம், கட்சிக்குத் தொடர்பில்லை என்று கூறி விட்டனர்.
41 வயதான பார்தி, டெல்லி மாளவியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். கெஜ்ரிவாலின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர். அப்போது டெல்லியில் நள்ளிரவில் ஆப்பிரிக்க பெண்களைக் குறி வைத்து நடந்த நள்ளிரவு ரெய்டு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பார்தி என்பது நினைவிருக்கலாம்.
சமீபத்தில்தான் டெல்லி கல்வி அமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங் டோமர் போர்ஜரி வழக்கில் கைதானார் என்பது நினைவிருக்கலாம். டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார சண்டையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பார்தி மீது புகார் கிளம்பியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications