நடிகை பாவனாவை கடத்த நடிகர் திலீப், பல்சர் சுனிலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா?
நடிகை பாவனாவை கடத்த நடிகர் திலீப் எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவை கடத்த நடிகர் திலீப், பல்சர் சுனீலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மலையாள திரைத்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியடையச் செய்தது.

திடுக்கிடும் உண்மைகள்
இதுதொடர்பாக பல்சர் சுனில் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
Recommended Video


ரூ.50 லட்சம்
மேலும் மலையாள திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்தான் நடிகை பாவனாவை கடத்த கூறியதாக பல்சர் சுனில் தெரிவித்துள்ளார். மேலும் பாவனாவை கடத்த 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் பல்சர் சுனில் தெரிவித்துள்ளார்.

தன் பெயரை சொல்லக்கூடாது
எந்தக் காரணத்துக்காகவும் தனக்கு இதில் தொடர்பு இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் கட்டளையிட்டிருந்தாராம் திலீப். ஆனால் மலையாள போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் எக்குதப்பாக சிக்கி உண்மையை கக்கிவிட்டார் பல்சர் சுனில்.

நேற்று கைது செய்யப்பட்டார் திலீப்
இதையடுத்து நேற்றுக் காலை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பை நேற்று மாலை அதிரடியாக கைது செய்தது கேரள போலீஸ். திலீப் - காவ்யா மாதவன் கள்ளக்காதல் குறித்து திலீப்பின் மனைவி மஞ்சுவாரியரிடம் அவரது தோழியான பாவனா தெரிவித்துள்ளார்.

பழிவாங்க சதித்திட்டம்
இதையடுத்து மஞ்சுவாரியரை விவாகரத்து செய்த திலீப் காவ்யா மாதவனை திருமணம் செய்துக்கொண்டார். இதற்கு பழிவாங்கும் விதமாகவே பாவனாவை கடத்தி பாலியல் தொல்லைகொடுக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார் திலீப் என்பது தெரியவந்துள்ளது.

காவ்யா மாதவனும்..
தன்னை நல்லவர் போன்று காட்டிக்கொண்ட திலீப் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மலையாள திரைத்துறைக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனிடையே பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் விரைவில் கைதாவார் என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications