திருப்பதி கோவிலில் சமந்தா... செல்ஃபி எடுக்க மொய்த்த ரசிகர்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சமந்தா திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏழுமலையான் கோவிலில் அவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

 Actress Samantha Visits Tirupati Temple

தரிசனத்திற்கு பிறகு கோவிலுக்கு வெளியே வந்த போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சமந்தாவை சுற்றி சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதையடுத்து அவரது தனியார் பாதுகாவலர்கள் அவரை மீட்டு காரில் அழைத்து சென்றனர்.

கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Samantha visited the temple city of Tirupathi balaji Temple.
Please Wait while comments are loading...