Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல! கொலை! நடிகர் மோகன்பாபு மீது போலீஸில் புகார்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: நடிகை சவுந்தர்யாவின் (சௌந்தர்யா) மரணம் விபத்தால் நடந்தது இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் நடிகர் மோகன்பாபு மீது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சவுந்தர்யா ஏப்ரல் 17, 2004 ஆம் ஆண்டு தனது 31 ஆவது வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார். சவுந்தர்யா இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

அதாவது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி அவர் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு விமானம் மூலம் வந்த போதுதான் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது.

சவுந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை

இந்த விபத்தில் அவருடைய உடல் கிடைக்கவில்லை. நடிப்பு திறன் உள்ள நடிகை இறந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் அவர் இறப்பு விபத்தல்ல, கொலை என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் புகார்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், "நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.

நிலத்தகராறு

ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.

நிலத்தை மீட்க கோரிக்கை

எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன்பாபுவுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டதையும் புகாரில் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த புகாரை கம்மம் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆணையருக்கும் அனுப்பியுள்ளார்.

மோகன்பாபுவிடம் விசாரிக்க கோரிக்கை

மேலும் இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிடம் இருந்து மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகன் மஞ்சு மனோஜ் மீது மோகன் பாபு புகார்

எனினும் இந்த புகார் குறித்து மோகன் பாபுவோ அவரை சார்ந்தவர்களோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு மஞ்சு மனோஜுக்கும் மோகன்பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து மோகன் பாபு, தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா மீது ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அடியாட்களுடன் வந்த மஞ்சு மனோஜ்

அந்த புகாரில் என் மகன் மனோஜ் என் வீட்டிற்கு 30 அடியாட்களுடன் வந்து என் வீட்டு பணியாட்களை மிரட்டினார். அவர்களை வீட்டை விட்டு வெளியேறவும் கூறியுள்ளார். மேலும் தனது அனுமதியின்றி அந்த வீட்டிற்கு யாரும் வரக் கூடாது என்றும் மிரட்டினார். இவ்வாறு மோகன் பாபு புகார் அளித்துள்ளார்.

யார் சவுந்தர்யா

நடிகை சவுந்தர்யா 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சவுமியா சத்தியநாராயணா. இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் நந்தி விருது, கர்நாடகா அரசின் இரு மாநில விருதுகள், 6 பிலிமிபேர் விருதுகளையும் பெற்றிருந்தார்.

சவுந்தர்யாவின் கடைசி படம்

தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சூர்யவன்ஷம் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தார். இவரது கடைசி படம் ஆப்தமித்ரா. விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்துடன் நடித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+