முஸ்லீம் என்பதால் வேலை மறுக்கப்பட்ட எம்.பி.ஏ. பட்டதாரிக்கு வேலை கொடுத்த அதானி
அகமதாபாத்: முஸ்லீம் என்பதால் வேலை மறுக்கப்பட்ட எம்.பி.ஏ. பட்டதாரியான ஜீஷான் கானுக்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானியின் நிறுவனம் வேலை வழங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனம் எம்.பி.ஏ. பட்டதாரியான ஜீஷான் கான்(22) ஒரு முஸ்லீம் என்பதால் அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. மும்பையில் படித்த ஜீஷான் தனக்கு மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜீஷானுக்கு அதானி குழுமத்தில் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கு மும்பை நிறுவனம் வேலை அளிக்க மறுத்த பிறகு பல நிறுவனங்கள் வேலை அளிக்க முன்வந்தன. என் நிலைமையை நினைத்து வருந்துவதாக கூறி பலர் எனக்கு இமெயில் அனுப்பினர். எனக்கு வேலை அளித்து வந்த இமெயில்களில் அதானி குழும வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தியாவில் உள்ள பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான அதானி நிறுவனத்தில் சேர்வது என முடிவு செய்து அகமதாபாத் வந்துள்ளேன் என்றார்.மதம், சாதி, சமூகம் இதை எல்லாம் தாண்டி திறமையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஜீஷான் திறமையானவர் என்பதை கண்டுபிடித்து அவருக்கு வேலை அளித்துள்ளோம் என்று அதானியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications