பாரத் மாதா கி ஜேன்னு எழுதலைன்னா படிக்க சீட் கிடையாது.... குஜராத் கல்வி நிறுவனம் அடாவடி
அகமதாபாத்: பாரத் மாதா கி ஜே என விண்ணப்பத்தில் எழுதவில்லையெனில் மாணவர்களை சேர்க்கமாட்டோம் என்று குஜராத்தில் பாஜக தலைவர் ஒருவர் நடத்தி நிறுவனம் கல்வி நிறுவனம் அடாவடியாக அறிவித்துள்ளது.
பாரத் மாதா கி ஜே என அனைவரும் முழக்கம் எழுப்ப வேண்டும் என கொளுத்திப் போட்டார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். அவ்வளவுதான் இந்துத்துவா அமைப்புகள் இதை வலியுறுத்தி வன்முறை பிரசாரத்தில் குதித்துவிட்டன.

யோகா குரு பாபா ராம்தேவோ, பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்கள் தலையை வெட்டுவேன் என்கிறார்; மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸோ, அப்படி முழக்கம் எழுப்ப முடியாது என்பவர்கள் இந்தியாவை விட்டு ஓடிப்போய்விடுங்கள் என மிரட்டுகிறார்.
இந்நிலையில் குஜராத் மாநில பாஜக தலைவரான திலீப் சங்க்ஹானி தலைமையில் நடத்தப்படும் ஸ்ரீபடேல் வித்யார்த்தி ஆசிரம அறக்கட்டளையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் பாரத மாதாவுக்கு ஜெய் என்று எழுதியிருந்தால் மட்டுமே இடம் சீட் வழங்குவது என அறிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளையின் கீழ் ஒரு நர்சரி பள்ளி, 2 உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி ஒன்று அம்ரேலியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 4500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அறக்கட்டளையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த குஜராத் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங், யாரும் பாரத மாதாவுக்கு ஜெய் என கூறுவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. இது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் முடிவாகும். பாரத மாதாவுக்கு ஜெய் கூறுவது நல்லதுதான். ஆனால் அது கட்டாயமில்லை. இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications