டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை... வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்களை தானே முன்வந்து நீதிமன்றம் தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுன் முதல் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தன.

இருப்பினும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வழக்கறிஞர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதற்காக தற்போது வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று கூறினார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-ந்தேதி மீண்டும் நடைபெறுகிறது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications