ரூ.3 கோடி ஹெராயினை வயிற்றில் வைத்து டெல்லிக்கு கடத்தி வந்த ஆப்கானிஸ்தானியர் கைது
டெல்லி: ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து காபூல் நகரில் இருந்து டெல்லிக்கு கடத்தி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் நூர் அமீர்(50). தென்கிழக்கு டெல்லியில் உள்ள லஜ்பட் நகரில் தங்கியிருக்கும் அவர் கஸ்தூர்பா நிகேதன் அருகே புதன்கிழமை மயங்கிக் கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து நூரை மயக்கம் தெளிய வைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலில் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த அவர் பின்பு சம்மதித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவர் தனக்கு வயிறு வலிப்பதாகவும், மலம் கழிக்க உதவும் மாத்திரை மட்டும் கொடுத்தால் போதும் என திரும்பத் திரும்ப கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன்பு ஒரு போலீஸ்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு நூருக்கு ஸ்கேன் எடுக்குமாறு டாக்டரிடம் தெரிவித்தார்.
ஸ்கேன் செய்தபோது நூரின் வயிற்றில் 95 ஹெராயின் போதைப் பொருள் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. அந்த ஹெராயின் மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
இதையடுத்து போலீசார் நூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காபூல் நகரில் இருந்து டெல்லிக்கு அந்த மாத்திரைகளை கடத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் சோதனையில் யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க அவர் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி வந்துள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதேபோன்று ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி டெல்லி வந்தார். வயிற்றில் இருந்த மாத்திரைகளில் ஒன்று வெடித்ததால் அவர் பலியானார். இதையடுத்து செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தான் அவரது வயிற்றில் ஏராளமான ஹெராயின் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications