ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி
ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீர், நொய்டாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நொய்டா: ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் உணரப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்
ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இதே போல நொய்டாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
காலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதம், பொருட்சேதம் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பாத்கீஸ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர், நொய்டாவில் உணரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications