டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக வாபஸ்! அரசுக்கு ஒரு மாதம் கெடு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கைகளை மதித்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்த
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டது.
கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் கேட்டு அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் 41 நாட்களாக போராடி வந்தனர். அதே நேரம் இன்னும் 30 நாளில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மே 25ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்து பேசியபிறகு அய்யாகண்ணு இம்முடிவுக்கு வந்துள்ளார். எங்களின் போராட்டத்தின் விளைவாக முதல்வர் எங்களை சந்தித்தார் என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மே 25ம் தேதி மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராடத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் திரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கைகளை மதித்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாம்பு, எலி கறி சாப்பிடுவது, நிர்வாணமாக ஓடுவது, சிறுநீரை குடித்தது என இந்தியாவையே இவர்களது போராட்டம் திரும்பி பார்க்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications