காஷ்மீருக்கு குறி.. ரூ.11 ஆயிரம் கோடி டீல்.. இம்ரானுடன் ஜிங்பிங் செய்த பகீர் ஒப்பந்தம்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: லடாக்கில் இருந்து கொஞ்சமாக பின்வாங்கி இருக்கும் சீனா தற்போது திடீரென காஷ்மீர் பகுதிகளுக்கு குறி வைக்க தொடங்கி உள்ளது. காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை சீனா குறி வைக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Pakistan உடன் China செய்த ஒப்பந்தம்.. Kashmir-ஐ வளைக்க திட்டம்?

    எல்லையில் அதிரடி திருப்பமாக லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. கல்வான் பகுதியில் இருந்து சுமார் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து சீனா இப்படி தனது படைகளை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் எல்லையில் சீனா தற்போது எல்லையில் இன்னொரு தந்திரத்தை செய்ய தொடங்கி உள்ளது.

    பாகிஸ்தான் காஷ்மீர்

    பாகிஸ்தான் காஷ்மீர்

    இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan-occupied Kashmir - PoK) என்று பெயர். இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி எப்போதும் பதற்றமான இடம் ஆகும். இங்கு அடிக்கடி இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.

    சீனாவின் குறி

    சீனாவின் குறி

    இந்த நிலையில் இங்கு இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு தற்போது சீனா குறி வைத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்காக ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா நீர் மின்சார திட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது. இதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாயில் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளது. பல திட்டங்களை மனதில் வைத்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    சிபிஇசி போட்டோ

    சிபிஇசி போட்டோ

    பாகிஸ்தானில் சீனா சிபிஇசி என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சீனா - பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் என்பது இந்த திட்டத்தின் பெயர் ஆகவும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு வகை ஆகும் இது. இதன் பொருட்டுதான் காஷ்மீர் மீது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த நீர் மின்சார திட்டத்திற்க்கு அசாத் பட்டான் ஹைட்ரோபவர் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பகுதி

    இந்தியாவின் பகுதி

    ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கீழ் இருந்து பின் பாகிஸ்தான் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட ஜஹ்லும் நீர் பகுதியில் சுதனோட்டி மாவட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்த ஐந்து வருடத்திற்குள் இந்த திட்டத்தை முடிக்க சீனா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி செய்கிறது. இதற்காக சீனா அங்கே ராணுவ கட்டுமான பணியாளர்களை குவிக்க உள்ளது .

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஏற்கனவே பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லை பகுதியில் சீனாவின் விமானப்படை அதிகம் உலவி வருகிறது. பாகிஸ்தானின் காஷ்மீரை ஏற்கனவே சீனா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்த தொடங்கி உள்ளது. இதற்கு இம்ரான் கானும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். இப்போது மொத்தமாக் காஷ்மீரின் முக்கியமான பகுதியை சீனாவிற்கு அள்ளிக்கொடுக்க உள்ளார் இம்ரான்.

    இந்தியா எதிர்ப்பு

    இந்தியா எதிர்ப்பு

    சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசியாவை மொத்தமாக கட்டுக்குள் கொண்டு வருவதுதான் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டம். இப்போது அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சீனா ஆக்கிமிரமிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு கீழ் இருந்த பகுதியில், இந்தியாவின் அனுமதி இன்றி பாகிஸ்தான் - சீனா இணைந்து திட்டங்களை கொண்டு வருவதை ஏற்க முடியாது, என்று இந்தியா கூறியுள்ளது.

    எதிர் எதிரே சந்தித்த போர் கப்பல்கள்.. 13 லட்சம் சதுர மைல் சண்டை.. சீனாவை சுற்றி வளைத்த அமெரிக்கா!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+