வறட்சி பாதித்த பகுதிகளில் சிரித்தபடி செல்பி... பங்கஜா முண்டேவுக்கு குவியும் கண்டனம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதித்த பகுதிகளுக்கு சென்ற அம்மாநில அமைச்சர் பங்கஜா முண்டே, அங்கு சிரித்தபடி செல்பி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காரணமாக மாநிலத்தில் கடும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் வறட்சி காரணமாக, குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. எனவே, மக்களின் நலன் கருதி ரயில்கள் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவை ஆளும் பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாதுகப்புத்துறை அமைச்சரான பங்கஜா முண்டே, தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
|
செல்பிக்கள்...
அவை வறண்ட பகுதிகளில் பங்கஜா எடுத்த செல்பிக்கள் ஆகும். வறட்சியை பார்வையிட சென்றபோது, இப்புகைப்படங்களை அவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. கோடையால் வற்றிய குளங்கள், கால்வாய்கள் அருகே அவர் சிரித்த முகத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
செல்பி கட்சி...
பங்கஜாவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பாஜக ஒட்டு மொத்தமாகவே செல்பி கட்சி எனத் தெரிவித்துள்ளது. கூடவே, வறட்சியை கிண்டல் செய்வது போல் பங்கஜாவின் செயல் இருப்பதாக அது கூறியுள்ளது.
|
சிவசேனா...
இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவும் பங்கஜாவின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சியின் மனிஷா கயண்டே கூறுகையில், "இது போன்ற மிகவும் சிக்கலான நேரத்தில் அமைச்சர்கள் செல்பிக்கள் எடுத்து வருகின்றனர். இது போன்ற செயல்களை செய்வதற்கு முன் தங்கள் செயல்பாடுகளை அமைச்சர்கள் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பங்கஜா முண்டே இதை தவிர்த்து இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
|
விளக்கம்...
ஆனால், தனது இந்த செல்பிக்களுக்கு பங்கஜா முண்டே விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட லத்தூர் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற போது, வறட்சி நிவாரணத்துக்காக அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் செய்த பணியை பாரட்டும் வகையில் இந்த செல்பிக்களை எடுத்ததாக' தெரிவித்துள்ளார்.
இவர் மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications