ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து.. இந்தியா சொல்லும் காரணம் சரியில்லை- பின்மெக்கானிக்கா
டெல்லி: இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான பின் மெக்கானிக்கா, தனது அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதற்குத் தெரிவித்துள்ள காரணங்கள் சரிவர இல்லை என்று அது கூறியுள்ளது. பின்மெ்க்கானிக்காவுக்குச் சொந்தமான இங்கிலாந்து - இத்தாலி நாட்டு கூட்டு நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 பாதுகாப்பு ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பாகவும், லஞ்சம் கைமாறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்து ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இதுகுறித்து பின்மெக்கானிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது கூறுகையில், இந்தியா தெரிவித்துள்ள காரணங்கள் போதுமானதாக இல்லை. அடிப்படை இல்லை. எங்களது நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தவிதமான முகாந்திரத்தையும் இந்தியா காட்டவில்லை.
எங்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள எந்தக் காரணத்திற்கும் அடிப்படை இல்லை.
இந்திய அரசுடன் தொடர்ந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். இதுதொடர்பாக இந்திய அரசுடன் பேசுவோம். பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்போம். இந்திய அரசு கோருவதற்கேற்ப செயல்படத் தயாராக உள்ளோம்.
ஏற்கனவே் இந்தியாவுக்கு வழங்கி, அந்த நாட்டு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள 3 ஹெலிகாப்டர்களுக்குத் தேவையான சேவைக்குப் பிந்தைய ஒத்துழைப்பை நாங்கள் நிச்சயம் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியா தனது ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதால் இதை அடிப்படையாக வைத்து இங்கலாந்தின் இயோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உற்பத்திப் பிரிவில் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் பின்மெக்கானிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் இயோவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் இந்திய அரசின் ஒப்பந்தம் ரத்து அறிவிப்பால் அப்செட்டாகியுள்ளதாகவும் பின் மெக்கானிக்கா தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications