அசாமில் அகர்தலா-எல்டிடி விரைவு ரயில் தடம் புரண்டது! விபத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில அகர்தலா-எல்டிடி பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சென்னைக்கு அருகே ரயில் விபத்தில் சிக்கிய ஒரு சில நாட்களில் அசாமில் மற்றொரு ரயில் விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திரிபுரா மாநிலத்திலிருந்து மும்பைக்கு அகர்தலா-எல்டிடி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அசாம் மாநிலம் திபோலங் ரயில் நிலத்திற்கு வந்தபோது தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. ரயிலின் என்ஜின் உட்பட 8 பெட்கள் தடம்புரண்டு உள்ளன. இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக லும்திங் - பாடர்பூர் சிங் லைன் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications