90 வயதானாலும் ஓயாத என்.டி.திவாரி.. பெண் தொகுப்பாளினியுடன் 'வலுக்கட்டாய' நடனம்
லக்னோ: முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை.
ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள்.
சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தினார்.

செக்ஸ் சர்ச்சை
பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார்.

தியாகிகள் நினைவு நாள்
இந்த நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பாட்டுப்பாடி நடனம்
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு திவாரியை மெதுவாக மேடையை விட்டு இறக்கிச் சென்றனர்.

தினசரி 3 பெண்கள்
ஆந்திரா மாநில ஆளுநராக இருந்த போது 86 வயதிலும் செக்ஸ் சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார் என்.டி திவாரி. திவாரிக்கு தினமும், மூன்று பெண்கள் வேண்டும். காலையில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்வார். இப்படி தினமும் அவரது பாலியல் ஆசைக்கு, பல பெண்களை அனுப்பி வைத் துள்ளேன் என்று ரியல் எஸ் டேட் தொழில் நடத்தி வந்த ராதிகா பரபரப்பு புகார் சொன்னார். இதனால் பதவியிழந்தவர் என்.டி.திவாரி என்பது நினைவிருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொது இடங்களில் நடனமாடிவருகிறார் என்.டி. திவாரி.












Click it and Unblock the Notifications